தமிழ்நாடு

பிரதமர் மோடி பதவியேற்பு விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு

பிரதமர் மோடி பதவியேற்பு விழா: கமல்ஹாசனுக்கு அழைப்பு

webteam

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 351 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங் களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கிறார். இந்த பதவியேற்பு விழா வரும் 30 ஆம் தேதி, மாலை 7 மணிக்கு ராஷ்ட்ரபதி பவனில் நடக்கிறது. இதில் நம் நாட்டு அரசியல் கட்சி தலைவர்களுடன் சில வெளிநாட்டு தலைவர்களும் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள, நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வது பற்றி கமல்ஹாசன் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.