தமிழ்நாடு

மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: சிலிண்டர் விலை குறித்து கமல்

மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: சிலிண்டர் விலை குறித்து கமல்

webteam

மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது என சிலிண்டர் விலை உயர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தியிருந்த நிலையில் தற்போது மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் விலை 785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் ஒரே மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலையை 75 ரூபாய் உயர்த்தியுள்ளன. பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், வெங்காயம் வரிசையில் சிலிண்டர் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெட்ரோல்,டீசல் விலை அன்றாடம் உயர்ந்துகொண்டே இருக்கிறது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒரே மாதத்தில் ரூ.75/-உயர்ந்துள்ளது. மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. இந்த அக்கறையற்ற போக்கினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை மேலும் உயர்ந்து ஏழ்மை அதிகரிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.