Indian 2 pt desk
தமிழ்நாடு

'நீங்கலாம் சினிமாவை விட்டு போகக்கூடாதுனு அவர் அழுதார்' - இந்தியன் 2 இசை வெளியீட்டில் கமல் பேச்சு

webteam

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. இதில், இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசும் போது... :

“இது நீளமான கதை. எங்கிருந்து ஆரம்பிகிறதுனு தெரியல. ஷங்கர் அடைந்திருக்கும் இந்த உயரம் அதிர்ஷ்டம், விபத்து அல்ல. அன்று பார்த்த அதே துடிப்புடன் இன்றும் இருக்காரு. அவர் முதன்முதல்ல ஒரு கதையை எடுத்துட்டு என்கிட்ட வந்தாரு. அப்போ எனக்கு அந்த சித்தாந்ததுல உடன்பாடு இல்லனு நடிக்கல. இது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். ஷங்கர் இதுக்கு பிறகும் என்கிட்ட வந்தாரு. அப்போ நான் சிவாஜி சாரை வச்சு ஒரு படத்தை இயக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தேன். அப்போ அதே மாதிரியான கதையைதான் ஷங்கர் சொன்னாரு. அப்போ நான் சிவாஜி ஐயாகிட்ட இதை பத்தி சொல்லும்போது அவரும் நீ சொன்ன கதையில நீ மகன் நான் அப்பா, இதுல அப்பாவும் மகனும் நீதான். இந்த கதையை பண்ணுனு சொன்னாரு.

Indian 2 Audio launch

நான் பலர் பல விஷயங்கள் கத்துக்கிட்டதுனால தான் இன்னைக்கு ரசிகர்கள் முன்னாடி நிக்கிறேன். சுபாஷ்கரன் இந்த படத்தை இன்னும் பார்த்திருக்கமாட்டாரு. எங்க ரெண்டு பேரையும் நம்பி பல விஷயங்கள் பண்ணுங்கன்னு சொன்னாரு. இந்த படத்துக்கு கொரோனா, விபத்துனு பல தடைகள் வந்துச்சு. இந்தியனே அரசியல்தான் பேசுது. என்னுடன் இந்த படத்துல உதயநிதி உறுதுணையாக நின்றது போல அவரோடு நான் உடன் நிற்கும் நேரம் வரலாம்.

மருதநாயகம் படத்துக்கு ரவிவர்மன் துணை ஒளிப்பதிவாளராக வேலைப் பார்த்தார். இந்த படத்துல எது கிராபிக்ஸ்னு கேட்டீங்கன்னா..அது தான் ஸ்ரீனிவாஸ் மோகனுடைய வெற்றி. அது போலதான் சொல்லப்போறாங்க. இந்த படத்துல் ஒரு அசிஸ்டன்ட் என்கிட்ட 'உங்க கூட நான் இந்த படத்துல மறுபடியும் வேலை பாக்குறேன்'னு சொன்னாரு. அவர் விபத்துல இறந்துட்டாரு. அதே போல் விவேக், மனோபாலா. அவங்க இல்லைங்கிறது உங்களுக்கு குறையாக இருக்கலாம். ஆனால், படத்துல அது குறையாக இருக்காது.

Kamal Director shankar

என் வயசை விட 15 வயசுதான் இந்தியன் தாத்தாவுக்கு அதிகம். என்னுடைய அடையாளம் தமிழன், இந்தியன் என்பதுதான். பிரித்தாளும் முயற்சி இந்தியாவுல நடக்காது. தமிழன் இந்தியாவை ஆளும் நாள் ஏன் வரக்கூடாது. இதையும் செய்து காட்டுவோம். இந்த விழாவுல இதை ஏன் பேசுனீங்கனு கேட்பாங்க. எந்த விழாவிலையும் பேசுவேன். இந்த நாட்டின் ஒற்றுமையை நாம் காக்க வேண்டும். அதைதான் இந்த படம் உணர்த்துகிறது. நும னார தந மநடலைந படத்தை பார்ப்பதற்கு மாறுவேஷத்துல போனேன். இந்தியன் படத்தோட ஷூட்டிங் சன் டிவி அலுவலகத்துல எடுத்தோம். அப்போ தேனாம்பேட்டையில இருந்து மயிலாபூருக்கு நடந்தே போனேன்.

ஒரு முறை நடிகர் டி.ராஜேந்திரன் என்னை கட்டிப்பிடிச்சு 'நீங்கலாம் சினிமாவை விட்டு போகக்கூடாது'னு அழுதாரு. நான் இங்க நிக்குறதுக்கு முக்கிய காரணத்துல அவரும் ஒருத்தர்” என்றார்.