தமிழ்நாடு

கமல்ஹாசன் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

கமல்ஹாசன் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

webteam

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்துள்ளது. கமல் வீட்டின்முன் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

அரசுக்கு எதிராக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் நடிகர் கமல் கருத்து தெரிவித்து வருகிறார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்துகளைக் கூறி வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசனின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் நடக்கும் ஊழல்கள் தொடர்பான ஆதாரத்தை அந்தந்த துறை அமைச்சர்களின் இணையதள இ.மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் அமைச்சர்களின் இணையதள முகவரிகள் மற்றும் இ.மெயில் தகவல் தொடர்புகள் அனைத்தும் திடீரென முடக்கப்பட்டது. இதையடுத்து ஊழல் புகார்களை லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அனுப்புங்கள் என்று கமல்ஹாசன் புதிய வேண்டுகோள் விடுத்துள்ளார். அதோடு ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தை எப்படி தொடர்பு கொள்வது என்ற விபரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன் வீட்டிற்கு பலத்த போடப்பட்டுள்ளது.