காங்கிரஸ் - மக்கள் நீதி மய்யம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான ஒதுக்கீட்டில் கை சின்னத்தில் மக்கள் நீதி மய்யம் போட்டி?

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தனது தோழமை கட்சிகளான காங்கிரஸ், விசிக, இடதுசாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இடம் பெற போவதாக தகவல் வெளியான நிலையில், அக்கட்சியுடன் மட்டும் திமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இதனால் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்னவென்றே தெரியாமல் இருந்தது. இப்படியான சூழலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம், கை சின்னத்திலேயே மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை போட்டியிட வைக்க காங்கிரஸ் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ராகுல்காந்தி - கமல்ஹாசன் இடையே நல்ல இணக்கம் இருப்பதால் இந்த கோரிக்கையை காங்கிரஸ் முன்வைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.