கமல்ஹாசன் pt web
தமிழ்நாடு

”அன்று ரிமோர்ட்டை டிவியில் எறிந்ததுவிட்டு, இன்று திமுக உடன் இணைந்தது ஏன்?” - கமல் கொடுத்த விளக்கம்

“டிவிக்கான கரெண்டையும், ரிமோர்டுக்கான பேட்டரியையும் உருவப் பார்க்கும் சக்தி ஒன்றியத்தில் உருவப்பார்க்கிறது. இனி நான் ரிமோர்ட்டை எறிந்தால் என்ன? வைத்திருந்தால் என்ன?” கமல்ஹாசன்

Angeshwar G

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து அவர்களுக்காக பிரச்சாரப் பணிகளையும் தொடங்கிவிட்டன. திமுக கூட்டணியில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் எஞ்சிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. அக்கட்சிக்கு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்படவில்லை எனினும் கூட, ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசன், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 29 ஆம் தேதி பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரிமோர்ட்டை எறிந்ததும் டிவியை உடைத்ததும்

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய கமல்ஹாசன், “சந்தர்ப்பவாதம் என்பது ஒரு வாதமே இல்லை என்பது தான் என் கருத்து. சந்தர்ப்பம் என்று ஒன்று இருக்கலாம்; வாதம் என்பது தனியாக இருக்க வேண்டும். நமது வாதத்தை சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடியெல்லாம் மாற்ற முடியாது. ரிமோட்டை எடுத்து டிவியில் அடித்தீர்களே, அங்குதானே செல்கிறீர்கள் என கேட்கிறார்கள். ஆனால், ரிமோட் இன்னும் என் கைகளில் தான் இருக்கிறது; டிவியும் அங்கேயேதான் இருக்கிறது. நம்ம வீட்டு ரிமோர்ட், நம்ம வீட்டு டிவி. அந்த டிவிக்கான கரெண்டையும், ரிமோர்டுக்கான பேட்டரியையும் உருவப் பார்க்கும் சக்தி ஒன்றியத்தில் உருவப்பார்க்கிறது. இனி நான் ரிமோர்ட்டை எறிந்தால் என்ன? வைத்திருந்தால் என்ன?

அரசியல் எதிரி யார்?

70 வருடங்களாக சாதியம் பேசாதீர்கள் என சொல்லிச்சொல்லி வளர்க்கப்பட்ட குழந்தைகள் இன்று வெள்ளைத் தலைகளுடன்(வயதாகி) அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சாதியை கற்றுக்கொடுக்கும் ஒரு மாபெரும் திட்டத்தைக் கற்றுக்கொடுக்கும், ஒரு கட்சியை, திட்டமோ, எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதைத் தகர்க்க வேண்டியது என் கடமை. என் அரசியல் எதிரியை முடிவு செய்துவிட்டேன். எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து நினைவு போகும் வரை என் எதிரி சாதியம்தான்.

எனக்கு இன்னும் யார் விலங்கிடப்பட்டுள்ளார்கள் என்று தெரிய வேண்டும். அவர்களுக்காக போராட வேண்டும் அதற்கு கணக்கெடுப்பு வேண்டும். எல்லா வீட்டிலேயும் பழைய பொருட்கள் இருக்கும். ஆனால் போகி வரும் போது பழைய பொருட்கள் நிலைமை என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியும்.

நான் காந்தியின் கொள்ளு பேரன். காந்தி இஸ்லாமியர்களுக்காக போராடி சாகவில்லை. மதச்சார்பற்ற இந்தியாவிற்காக போராடி செத்தவர் அவர். அந்த மதச்சார்பற்ற இந்தியாவிற்காகத்தான் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. நமக்கு கற்று கொடுத்த கண்ணியம் கட்டுப்பாட்டை பின்பற்றுவது மீறல் ஆகாது.

"தியாகம் செய்யவில்லை; வியூகம் அமைத்துள்ளோம்"

என் தந்தை சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் காங்கிரஸ்காரர் தான்.. கொஞ்சம் முண்டியடித்திருந்தால் மந்திரி ஆகியிருப்பார்.

இப்போது நடப்பது இந்தியாவிற்கான களம், தமிழகத்திற்கான களம் 2026. இப்போது நாம் தியாகம் செய்யவில்லை வியூகம் அமைத்துள்ளோம். மனிதம் எல்லா சிந்தாங்ககளையும் கடந்தது,சில திக்கு வாய் காரர்கள் அதை மதம் என கூறி வருகின்றனர்.

#BREAKING | சாதியம்தான் எனக்கு எப்போதும் எதிரி: கமல்

அரசியலும் மதமும் சேர்ந்த எந்த ஒரு நாடும் உருப்பட்டது இல்லை. சந்திரசூட் பாராட்ட பட வேண்டியவர். அவர் மகன் அவரை விட அதிகமாக பேசுகிறார். இப்படி சிந்தனை உள்ள நபர்கள் இன்னும் இருக்கிறார்கள். கிரிக்கெட்டில் கூட அரசியல் உள்ளது.

அரசியலும் மதமும் ஆபத்தான கலவை என வசனம் எழுதி இருந்தாலும் அது என் மனதில் தோன்றியது. அந்த பயம் தற்போது வரை விடவில்லை இன்னும் அதிகரித்து உள்ளது. சக கட்சிகள் வந்து பிரமாதமாக வேலை செய்தார்கள் என கூற வேண்டும்; அப்படி நீங்கள் பணியாற்ற வேண்டும். எதிர்கட்சி கார்கள் நம்மை பார்த்து பயம் கொள்ள வேண்டும், சக கூட்டணியை சார்ந்தவர்கள் அவர்களை போட்டால் நன்றாக இருக்கும் என கூற வேண்டும்.

அவர்களது மேடையில் நீங்கள் ஒத்திகை பார்க்கலாம்

இது ஒரு அற்புதமான வாய்ப்பு அவர்கள் மேடையில் நீங்கள் ஒத்திகை பார்க்கிறீர்கள்; இதற்கு அவர்கள் மேடை போட்டு தருகிறார்கள். விருப்பத்துடன் இப்படி ஒரு அனுமதி எங்கு கிடைக்கும்.

ஏன் படம் நடித்து வருகிறீர்கள் என கேட்கின்றனர். எனக்காக உழைக்கும் நபர்களுக்கு நான் காலை உணவையாவது வழங்க வேண்டும். யாரும் வெளியே சென்று கை நீட்டாதீர்கள். 2026க்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளது. அதற்கு முன் இரண்டு படங்கள் நடித்து விடுவேன் காலை உணவுக்கு தயார் செய்து விடுவேன்” என தெரிவித்தார்.