தமிழ்நாடு

பிறந்தநாளில் கருப்பு சட்டையா? முனுமுனுத்த தொண்டர்கள்..!

பிறந்தநாளில் கருப்பு சட்டையா? முனுமுனுத்த தொண்டர்கள்..!

Veeramani

பூந்தமல்லியில் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது,பிறந்தநாளான இன்று அவர் கருப்பு சட்டையில் வந்ததால், கட்சி நிர்வாகிகளிடம் பேசுபொருளாக மாறியுள்ளது


தமிழ் திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  கமலின் பிறந்தநாளை முன்னிட்டு பூந்தமல்லியில் மோட்டார் சைக்கிளில் பேரணி நடைபெற்றது. மநீம தொண்டர்கள் செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடக்கும் ஈ வி பி பிலிம்சிட்டி வரை மேளதாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்தும் ஊர்வலமாக கமல்ஹாசனுக்கு வரவேற்பளித்தனர்.

ஈ வி பி பிலிம் சிட்டி வந்தவுடன் காரின் மேல் பகுதியில் நின்று கட்சி தொண்டர்களை பார்த்து கையசைத்த கமல், கட்சி நிர்வாகிகள் கொடுத்த வரவேற்பை ஏற்றுக் கொண்டார், இதனை தொடர்ந்து நடிகர் கமலுக்கு பூசணிக்காய் சுற்றியும் கும்ப மரியாதை வழங்கப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு பின்னர் உள்ளே பிலிம்சிட்டி உள்ளே சென்றார். நடிகர் கமல்ஹாசனை காண கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு ஒன்றுகூடி திரண்டு செல்ஃபி எடுத்து கொண்டனர்.

குறிப்பாக பிறந்தநாள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கருப்பு உடைகள் அணியக்கூடாது என பெரியவர்கள் சொல்வது வழக்கம் ஆனால் அதற்கு மாறாக தனது பிறந்த நாளன்று நடிகர் கமல் கருப்புச் சட்டையில் வந்தது கட்சியினர் மத்தியில் பேசும் பொருளாக இருந்தது. இது தொடர்பாகவும் தொண்டர்கள் முனுமுனுத்துக்கொண்டதை கூட்டத்தில் பார்க்கமுடிந்தது