கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் ட்விட்டர்
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி - உயரும் விஷ சாராய உயிரிழப்புகள்; ஆலோசனை மேற்கொள்ளும் முதலமைச்சர்!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ள நிலையில், கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

PT WEB

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்திருந்த நிலையில் நேற்று மேலும் 13 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 52 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி சேலம் மருத்துவமனையில் 17 பேரும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 28 பேரும் உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள்

முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேரும் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.