ஓட்டுநர் மாரிமுத்து  புதிய தலைமுறை
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி : பயணிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு தன் உயிரைவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர்!

திருக்கோவிலூரில் அருகே பயணிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே விருத்தாசலத்தில் இருந்து திருப்பதிக்கு 18 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் மாரிமுத்து என்பவர் ஓட்டி சென்றுள்ளார். பேருந்து திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

திருக்கோவிலூர் பேருந்து நிலையம்

இதையடுத்து ஓட்டுநர் மாரிமுத்து, 18 பயணிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்து நெஞ்சுவலியைத் தாங்கிக் கொண்டு சாலையின் ஓரமாகப் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு இருக்கையிலேயே மயக்கம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து மயக்கம் அடைந்த மாரிமுத்துவை நடத்துநர் மற்றும் சக பயணிகள் மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே ஓட்டுநர் மாரிமுத்து உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திருக்கோவிலூர் அரசு மருத்துவனை

18 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி விட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.