தமிழ்நாடு

எச்சரித்தும் அனுமதியின்றி நடத்தப்பட்ட விடுதி: கள்ளக்குறிச்சி பள்ளி குறித்த பகீர் தகவல்

எச்சரித்தும் அனுமதியின்றி நடத்தப்பட்ட விடுதி: கள்ளக்குறிச்சி பள்ளி குறித்த பகீர் தகவல்

webteam

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளி விடுதி அனுமதி இன்றி செயல்பட்டு வந்தது மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது. ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி தலைமையில் உறுப்பினர்கள் துரைராஜ், சரண்யா ஜெயக்குமார் மற்றும் முரளி ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.

முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை மேற்கொண்ட அவர்கள் தொடர்ந்து முதற்கட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையர் சரஸ்வதி கூறுகையில், சின்ன சேலம் தனியார் பள்ளி விடுதி முறையான அனுமதி இன்றி செயல்பட்டு வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறினார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் மூலம் எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து அந்த விடுதி செயல்பட்டு வந்ததாகவும் அந்த விடுதியில் 24 மாணவியர் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், இது தண்டனைக்குரிய குற்றம் என்றும் கூறிய அவர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றார்.

இதையும் படிக்கலாம்: கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதிகேட்டு போராட்டம் என பரவிய தகவல்: கல்லூரி முன் குவிந்த போலீஸ்