Seeman pt desk
தமிழ்நாடு

”திமுகவுக்கும் பாஜகவுக்கும் கொள்கை மாறுபாடு இல்லை; அந்த 100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு” - சீமான்

திமுகவுக்கும் பாஜகவுக்கும் கொள்கை மாறுபாடு இல்லை. வெளியில் எதிர்ப்பது போல எதிர்த்து விட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

webteam

செய்தியாளர்: ராஜ்குமார்

தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை முதல் நடைபெற்றது.

இந்நிலையில், சென்னை பின்னி லிங்க் சாலையில் உள்ள சென்னை மின்வாரிய தலைமையகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய சீமான்....

TNEB

”மின்சாரத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டிய அரசு மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் போராடினால் அரைமணி நேரத்தில் தமிழக அரசு அவர்களின் கோரிக்கையை சரி செய்யும். தமிழக அரசு மின்சார வாரிய கேங்மேன் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும்.

நவீன தொழில்நுட்பம் வளர்ந்தும் தமிழ்நாட்டில் போஸ்ட் மரத்தில் ஏறி ஊழியர்கள் வேலை செய்வது தமிழ்நாட்டின் அவல நிலையை காட்டுகிறது. 17 மாதங்களில் தமிழ்நாட்டில் நாம் தமிழருக்கு ஒரு காலம் வரும். அப்போது மின்வாரிய கேங்மேன் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்” என்று பேசினார்.

கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும்:

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான் பேசிய போது... தமிழ்நாட்டு மின்வாரிய ஊழியர்கள் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். மின்வாரியத்தில் 63 ஆயிரம் காலியிடங்கள் உள்ள நிலையில், கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும். ஊழியர்களை அவர்களின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே பணி நியமனம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் போராடுகிற மக்களை பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புவது அரசுக்கு புதிதல்ல.

நாணய வெளியீட்டு நிகழ்வில்...

திமுகவுக்கும் பாஜகவுக்கும் கொள்கை மாறுபாடு இல்லை:

100 ரூபாய் நாணயத்திற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த தமிழக அரசு, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்காததுக்கு கேள்வி எழுப்பாதது ஏன்? திமுகவுக்கும் பாஜகவுக்கும் கொள்கை மாறுபாடு இல்லை. வெளியில் எதிர்ப்பது போல எதிர்த்து விட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். நேற்று பேண்ட் போட்டிருந்த முதலமைச்சர், காக்கி நிற பேண்ட் போட காரணம் என்ன? நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் முதல்வராகலாம். நாம் தமிழர் நிர்வாகி மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது , காவல்துறை கைது செய்திருக்கிறது.. தவறு யார் செய்திருந்தாலும் தவறுதான்.

100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு:

நேற்று வெளியிட்ட கலைஞர் நூற்றாண்டு 100 ரூபாய் நாணயம் செல்லாக்காசு. அதைப்பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. 100 ரூபாய் நாணயத்தை டாஸ்மாக்கில் கொடுத்தால் ஒரு குவாட்டர் வேண்டுமானால் வழங்கச் சொல்லலாம்” என சீமான் தெரிவித்தார்.

Premalatha

உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதா?

இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆர்ப்பாட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளிடம் பேசும் போது, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத அரசாக, திமுக அரசு இருக்கிறது. ஆசிரியர்கள், மின் ஊழியர்கள், செவிலியர்கள் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யாமல், நாணயம் வெளியீட்டு விழா மற்றும் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதாக விமர்சித்தார்.