தமிழ்நாடு

நேர்மையின் சின்னம் கக்கன் பயின்ற பள்ளியை சீரமைக்க உத்தரவு

webteam

சுதந்திர போராட்ட வீரரும் தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான கக்கன் மதுரையில் பயின்ற பள்ளியை சீரமைக்க கொட்டம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த செலவு மதிப்பீடை பரிசீலித்து 4 வாரங்களில் உரிய நிதியை அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை தும்பைப்பட்டியில் கக்கன் பயின்ற பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி கட்டடத்தை சீரமைக்கவும், முறையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தவும் உத்தரவிட கோரி கக்கனின் பேரன் சரசுக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கக்கன் பயின்ற பள்ளியை சீரமைக்க 7 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவாகும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தரப்பில் செலவு மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியரின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள் கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரின் செலவு மதிப்பீட்டை பரிசீலனை செய்து, 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும் அதனைத் தொடர்ந்து விரைவில் பள்ளிக்கட்டிடத்தை சீரமைக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.