தமிழ்நாடு

தொடரும் எம் பி ஜோதிமணியின் போராட்டம் - ‘வாய்மையே வெல்லும்’ என கரூர் ஆட்சியர் ட்வீட்

Sinekadhara

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்து தலைமைச் செயலர் இறையன்புவிற்கு கரூர் எம்.பி. ஜோதிமணி புகார் மனு அனுப்பியுள்ளார்.

கரூரில் மத்திய அரசின் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான முகாம்களை நடத்தவில்லை என குற்றம்சாட்டி, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் சென்று, அவரை சமாதானப்படுத்தினார். விரைவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான முகாம்கள் நடத்தப்படுமென உறுதியளித்தார். இந்நிலையில், கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் மீது புகார்களை முன்வைத்து, தலைமைச் செயலர் இறையன்புவிற்கு எம்.பி. ஜோதிமணி புகார் மனு அனுப்பியுள்ளார்.

அதில், கரூர் ஆட்சியர் பிரபுசங்கரின் மேசையிலிருந்து இரண்டு சதவிகிதம் வரை கட்டாய வசூல் முடிந்த பிறகுதான் கோப்புகள் நகரும் என்று மக்கள் மத்தியில் பரவலாக கருத்து நிலவுவதாக ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார். கரூர்‌ ஆட்சியர்‌ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் அவர் கோரியுள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">வாய்மையே வெல்லும் ! <a href="https://t.co/Bfcsq0QS9j">pic.twitter.com/Bfcsq0QS9j</a></p>&mdash; Prabhushankar T Gunalan (@prabhusean7) <a href="https://twitter.com/prabhusean7/status/1463884006005428224?ref_src=twsrc%5Etfw">November 25, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

மேலும், 10 மணி நேரத்தை கடந்தும் எம் பி ஜோதிமணியின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் "வாய்மையே வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.