தமிழ்நாடு

சமரச மையங்களை பொது மக்களின் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் : நீதிபதி கிருபாகரன்

சமரச மையங்களை பொது மக்களின் கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் : நீதிபதி கிருபாகரன்

webteam

சமரச மையங்களை பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டியது ஒவ்வொரு வழக்கறிஞரின் கடமை என நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று, தமிழ்நாடு மதியஸ்தம் மற்றும் சமரசம் மையத்தின் 14 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மதுரை கிளையின் நிர்வாக நீதிபதி கிருபாகரன், வழக்கறிஞர்கள் மதியஸ்தம் மற்றும் சமரசம் மையத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும். குடும்ப வழக்கு மற்றும் சொத்து வழக்குகளில் ,வழக்கறிஞர்கள் இந்த சமரசம் மையம் மூலம் பிரச்சனைகளை சுமூகமாக பேசி முடிக்க முயல வேண்டும் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் நீதிமன்றத்தில் வாதாடி யார் வழக்கை ஜெயிக்கிறார்கள் என்பது முக்கியம் அல்ல, வழக்கு தொடர்பவர்களை, பேசி சமரசம் செய்வதுதான் வழக்கறிஞருக்கு மன திருப்தி தரும் என்று கூறினார்.

மேலும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கை ஜெயிப்பதை விட இரு தரப்பினரையும் நீதிமன்றத்தில் உள்ள மதியஸ்தம் மற்றும் சமரசம் மையம் மூலம் சமரசமாக பேசி முடிப்பது தான் சிறந்தது என்றார். இதை மூத்த வழக்கறிஞர்கள்,இளம் வழக்கறிஞர்க்கு வழிகாட்டுதலாக செய்து காட்ட வேண்டும். மேலும், இது போன்ற சமரச மையங்களை பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டியது ஒவ்வொரு வழக்கறிஞரின் கடமை எனவும் அவர் தெரிவித்தார்.