தமிழ்நாடு

ஆணவக் கொலைவழக்கில் வரலாற்று தீர்ப்பளித்த நீதிபதி காலமானார்

ஆணவக் கொலைவழக்கில் வரலாற்று தீர்ப்பளித்த நீதிபதி காலமானார்

webteam

தமிழகத்தை உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் வரலாற்று தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன் காலமானார்.

திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன். தமிழகத்தை உலுக்கிய உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இவர் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இவர் மூச்சுத்திணறல் காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  சிகிச்சை பலனின்றி நீதிபதி அலமேலு நடராஜன் காலமானார்.

கோவை மாவட்டம் போத்தனூரில் பிறந்த அலுமேலு நடராஜன், பள்ளி படிப்பை, திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளியிலும், சட்டப்படிப்பை திருச்சி சட்டக் கல்லூரியிலும் முடித்தார். 1991ம் ஆண்டு நீதித்துறையில் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட்டாக பதவியேற்ற அவர், மாவட்ட நீதிபதியாக கோவையிலும், பின்னர் வேலூரிலும் பணியாற்றியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு, முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக திருப்பூரில் பொறுப்பேற்றார் அலமேலு நடராஜன்.