நீதிபதி கர்ணன் கடந்த 43 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில், தமிழக காவல்துறையினரின் உதவியுடன், கொல்கத்தா காவல்துறையினர் கோவை அருகே தங்கும் விடுதி ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 43 நாட்களாக தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணனை, கோவை அருகே நேற்று கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் சென்னை கொண்டுவரப்பட்டு, பின்னர் இன்று காலை 11.40 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டார். கர்ணன் மேற்குவங்கத்தின் பிரசிடென்ஸி சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இன்று இரவு 9 மணி வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கால அவகாசம் இருப்பதால், தமிழக நீதிமன்றங்களில் அவர் ஆஜர்படுத்தப்படவில்லை.
நீதிபதி கர்ணன் கடந்த 43 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில், தமிழக காவல்துறையினரின் உதவியுடன், கொல்கத்தா காவல்துறையினர் கோவை அருகே தங்கும் விடுதி ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது உறவினர்களில் தொலைப்பேசி அழைப்புகளை ஆய்வு செய்த போது, நீதிபதி கர்ணன் இருப்பிடம் தெரியவந்ததாக காவல்துறையினர் கூறினர்.
கர்ணன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என வழக்கறிஞர் மேத்யூஸ் நெடுமரா தகவல் தெரிவித்துள்ளார்.