பத்திரிகையாளர் பிரியன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

"சீமானுக்கு விஜய் கொடுத்த இடி! பதற்றத்தில் சீமான்?" விளக்கி சொல்லிய பிரியன்

”சீமானுக்கு விஜய் கொடுத்த இடி! பதற்றத்தில் சீமான்?" விளக்கி சொல்லிய பிரியன்.

ஜெனிட்டா ரோஸ்லின்

”சீமானுக்கு விஜய் கொடுத்த இடி! பதற்றத்தில் சீமான்?" விளக்கி சொல்லிய பிரியன்.

விஜயின் அரசியல் முன்னெடுப்பு எப்படி இருக்கிறது.. தவெக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்கள், சீமானின் கடும் விமர்சனம் போன்றவை குறித்து விளக்குகிறார் பத்திரிகையாளர் பிரியன்.

”பிளவுவாத அரசியல், மதவாத அரசியல் என கொள்கை ரீதியான எதிரியாக பாஜகவையும், அரசியல் ரீதியான எதிரியாக திமுகவையும் விஜய் தெளிவுப்படுத்தி இருக்கிறார். இந்த விஷயங்களின் அடிப்படையில்தான், தவெக தீர்மானங்களும் இடம்பெற்றிருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் மத்திய அரசின் முன்னெடுப்பு ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்று என்று கண்டிக்கிறார். வக்ஃபு வாரியச் சட்டத் திருத்தத்தையும் எதிர்க்கிறார், தமிழ்தாய் வாழ்த்து போன்றவற்றில் ஏற்பட்ட குளறுபடிகள், திருவள்ளுவருக்கு காவி அணிந்த விஷயங்களையும், கட்சத்தீவை மீட்டெடுப்பது, மும்மொழிக்கொள்கை எதிர்ப்பு போன்ற விஷயங்களையும் கையில் எடுத்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீட் தேர்வில் மாநில அரசு பொய் வாக்குறுதிகளை கொடுத்து நாடகமாடுகிறது என்கிற வகையிலும் பேசியிருக்கிறார். மேலும், ’உங்களுக்கு எதிரான குரல்களை நீங்கள் அடக்குகிறீர்கள்’ என திமுகவிற்கு எதிராகவும் கருத்துகளையும் முன்வைத்துள்ளார்.

மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக...

இப்படி, மத்திய - மாநில அரசு என இரண்டையும் எதிர்த்து விஜய் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ,இரண்டு அரசாங்கத்தையும் சமமாக எதிர்க்கும் போக்கைத்தான் விஜயின் தீர்மானங்களின் பார்க்க முடிகிறது. தீர்மானங்கள் அனைத்திலும் தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்களை ஒட்டியுள்ள பிரச்னைகள் என இன்றைக்கு தேவையான விஷயங்களை புரிந்துகொண்டுதான் விஜய் தனது கட்சியை கொண்டு செல்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

பெரும்பான்மை - சிறுபான்மை, பாசிசம் - பாயாசம் போன்றவை பாஜகவின் குரல்களாக இருக்கிறது. இதைத்தான் சீமான் உட்பட பல அரசியல் தலைவர்களும் கண்டித்தார்கள்.

அன்றைக்கு இதில் குழப்பம் இருந்தாலும், தற்போதைய பிரச்னைகள் தொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றி ..’எங்களின் நிலைப்பாடு மத்திய அரசை எதிர்த்துதான் இருக்கும்’ என்று கூறி தற்போது தெளிவாக்கி இருக்கிறார் என்றுதான் கூறவேண்டும்.

சீமானுக்கு பெரிய அடி!

இன்னும் போகபோக மோடி அரசின் வேறு பல ஊழல்கள் என அனைத்தையும் புரிந்துகொள்வார். காங்கிரஸ் பற்றி எந்த கருத்துகளையும் விஜய் வைக்கவில்லை என்று கருத்தும் இருக்கிறது.. அதிமுக வலிமையற்று கிடப்பதால் எதற்கு அதனை தாக்க வேண்டும் என்று கூட விஜய் நினைத்திருக்கலாம்.. அதற்காக , அதிமுக ஊழலே செய்யவில்லை என்று விஜய் நினைக்கிறார் என நாம் நினைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

மேலும், சீமானை பொறுத்தமட்டில், இரண்டு நாட்களாக சீமான் வைக்கும் கடும் விமர்சனங்கள் எதற்கும் பதிலளிக்காமல் இருப்பதே, சீமானுக்கு பெரிய அடிதான் என்று நினைக்கிறேன்.

இரண்டு நாட்களாக கடும் விமர்சனங்களை சீமான் முன்வைத்தார்.. தனது ஓட்டு வங்கிக்கு ஏதாவது பிரச்னை வரும் என்ற அச்சத்திலேயே அவர் அதை செய்திருக்கலாம்.

ஆனால், சீமானை கண்டுகொள்ளாமல் விஜய் சீமானை அலட்சியப்படுத்துகின்ற விஷயம் என்பது சீமானின் மனதை நிச்சயம் புண்படுத்தும் விதமாகதான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்..” என்று தெரிவித்துள்ளார்.