தமிழ்நாடு

"ஆளுநர் பதவிக்கான கட்டமைப்பு, இந்தியாவிற்கே தேவையில்லை" – பத்திரிகையாளர் இந்து என்.ராம்

"ஆளுநர் பதவிக்கான கட்டமைப்பு, இந்தியாவிற்கே தேவையில்லை" – பத்திரிகையாளர் இந்து என்.ராம்

webteam

“இந்தியாவிற்கு கவர்னர் பதவி என்பது தேவையில்லை” என பிரபல பத்திரிகையாளர் இந்து என்.ராம் கருத்து தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பத்திரிகையாளர் இந்து ராம், அங்கு பேசியபோது, “இந்தியாவிற்கு கவர்னர் பதவி தேவையே இல்லை. கவர்னர் என்பவர் ஒரு மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்பதை தமிழகம் என மாற்றலாமா? இது போன்ற செயல்கள் ஆளுநருக்கு தேவையில்லாத விஷயம்.

மாநில அரசின் சார்பாக அளிக்கப்பட்ட மனுக்களை டெல்லிக்கு அனுப்பாமல் தனது டேபிளிலேயே வைத்துக் கொண்டு தமிழக ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார். இதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று, மாநில ஆளுநரிடம் அளிக்கப்படும் மனுக்களுக்கு தீர்வு காண குறிப்பிட்ட கால வரையறையை அரசு நிர்ணயிக்கப்பட வேண்டும்.

ஆளுநரின் இத்தகைய போக்கு ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இருந்தால் அதை மதிப்பது ஆளுநரின் கடமை. எனவே இந்த ஆளுநர் பதவிக்கான கட்டமைப்பு இந்தியாவிற்கு தேவை இல்லை” என தெரிவித்தார்.