இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பென்னிகுயிக்கின் 181ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, இங்கிலாந்தில் தமிழக அரசு சார்பில் பென்னிகுயிக் சிலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைபெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக் பிறந்த ஊரான கேம்பர்லியில் அவரது சிலை அமைக்கப்படும் எனவும்,
முல்லைபெரியாற்றில் தமிழகத்தின் உரிமையைக் காக்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கேம்பர்லியில் பென்னிகுயிக்கின் சிலையை நிறுவ, அங்கு வாழும் தமிழர்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் சிலை, அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் <a href="https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> அவர்கள் அறிவித்துள்ளார். <a href="https://t.co/9VSAJfcImA">pic.twitter.com/9VSAJfcImA</a></p>— CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://twitter.com/CMOTamilnadu/status/1482247225862672386?ref_src=twsrc%5Etfw">January 15, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>