தமிழ்நாடு

தமிழகத்தில் முல்லைப் பெரியாறு நாயகனின் குடும்பம்

தமிழகத்தில் முல்லைப் பெரியாறு நாயகனின் குடும்பம்

webteam

பல்வேறு தடைகளை தாண்டி, தனது சொத்துகளை எல்லாம் விற்று அணை கட்ட ஒருவரால் முடியுமா ? மக்களுக்காக செய்ய முனைந்தால் எதுவும் முடியும் என்று முல்லை பெரியாற்றில் அணை கட்டி தமிழக மக்களின் தாகம் தீர்த்தவர் கர்னல் ஜான் பென்னி குவிக். ஆண்டுகள் நூறு கடந்தும் அசையாமல் நிற்கும் அதன் உறுதி , அவரின் உறுதி என்றே பார்ப்போர் நினைக்க தூண்டும்.

ஆனால் விஷயம் அதுவல்ல.. அணையை கட்டிய பென்னிகுவிக்கின் பேரன் பேத்திகள் பொங்கல் பண்டிகையை தேனியில கொண்டாட வந்திருக்காங்க. பொங்கல் பண்டிகையோட, இவங்களோட வருகையும் சேர்ந்ததால தேனிப்பகுதியே விழாக்கோலம் கொண்டிருக்கு.

குறிப்பா கம்பம், உத்தமபாளையம் தடபுடல் வரவேற்பு வேறு.பென்னிகுவிக்கின் பேரன், பேத்திகளான சூசன் பெரோ, சரோன், டயானா மற்றும் ஷானி ஆகியோர் லண்டன்ல இருந்து சென்னை வந்திருக்காங்க. நாளைக்கு முல்லைப் பெரியாறு அணைக்கு போய், தங்களோட தாத்தா கட்டிய அணையை பார்வையிட போற அவங்க, 15-ம் தேதி தேனியில் நடக்கிற பென்னிகுவிக் பிறந்தநாள் விழாவில கலந்துக்குறாங்க.

இதுமட்டும் இல்லங்க, இவங்க எல்லாருக்கும் தமிழ் நாட்டோட பொங்கல் விழா கலாச்சாரம் ரொம்பவே பிடிக்குமாம். அதனால் தேனிய சுற்றியிருக்கிற பல்வேறு பகுதிகளுக்கு போய் ஒவ்வொரு ஊருலையும் எப்படி பொங்கல் வைக்கிறாங்க அப்படிணும் தெரிஞ்சிக்க போறாங்க.

இந்த நாலு பேரும் இருக்க போற மூணு நாளையும் ஒரு மினி திருவிழா மாதிரி கொண்டாட தமிழக பொதுப்பணித்துறை, கம்பம் பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகம் சிறப்பா செஞ்சிருக்காங்கலாம்..