தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவு மண்டபம் : பீனிக்ஸ் பறவை வடிவில் அமைகிறது

ஜெயலலிதா நினைவு மண்டபம் : பீனிக்ஸ் பறவை வடிவில் அமைகிறது

webteam

மெரினாவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு மண்டபம் பீனிக்ஸ் பறவையின் வடிவில் அமையவுள்ளது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதி மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஜெயலலிதா நினைவிடமாக மாற்றி அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நினைவு மண்டபம் ஜெயலலிதாவின் நினைவுகளை போற்றும் வகையில் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. அதன்படி, பீனிக்ஸ் பறவை போல் இந்த மண்டபம் அமைக்கப்படவுள்ளது. 

அதன் மாதிரிப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று காலை 9 மணி அளவில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு காலை 6.30 மணி முதல் யாக பூஜைகள் தொடங்கியுள்ளது. இதில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அமைச்சர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இதுதவிர ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் பங்கேற்றுள்ளனர்.