தமிழ்நாடு

ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது ஏன்?

webteam

ஜெயலலிதாவிடம் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்கள் படித்து காட்டப்பட்டு தான் கைரேகை வாங்கப்பட்டது என அப்போலோ மருத்துவ குழு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த வேட்புமனு தாக்கலின் போது, அதிமுக வேட்பாளர்களுக்கு கட்சியின் சின்னம் வழங்குவது தொடர்பான அங்கீகார கடிதத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக அவரது இடது கை பெருவிரலின் ரேகை பதியப்பட்டு இருந்தது. இந்த ரேகை, ஜெயலலிதாவினுடையதா என்ற சந்தேகம் இருப்பதாக வதந்தி பரவியது.

இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த மருத்துவ குழுவினர்கள்

ஜெயலலிதாவின் கையில் டிரிப் ஏற்றி, கை வீக்கத்துடன் இருந்ததால் கையெழுத்து வாங்க முடியவில்லை என்றும். தேர்தல் ஆணையத்தின் ஆவணங்கள் படித்து காட்டப்பட்டு கைரேகை பெறப்பட்டது என்று தெரிவித்தனர். அப்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாகவும் கைரேகை பெறும்போது டாக்டர்கள் பாலாஜி, பாபு ஆகியோர் உடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.