தமிழ்நாடு

குட்கா விவகாரத்தில் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க விரும்பினார்: ராம மோகன ராவ் பேட்டி

குட்கா விவகாரத்தில் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க விரும்பினார்: ராம மோகன ராவ் பேட்டி

webteam

குட்கா முறைகேடு விவகாரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க விரும்பினார் என முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ஹிந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில், குட்கா முறைகேடு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். எனினும் அந்த உத்தரவை பிறப்பிக்கும் முன் ஜெயலலிதா உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் ராமமோகன ராவ் தன் பேட்டியில் கூறியுள்ளார். 

குட்காவை சட்டவிரோதமாக விற்க அனுமதித்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் பெயர்கள் அடங்கிய அறிக்கையை வருமான வரி அதிகாரிகள் தன்னிடம் வழங்கியது உண்மைதான் என்றும் அது ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராமமோகன ராவ் தெரிவித்துள்ளார். குட்கா விவகாரத்தில் வருமான வரித்துறை சமர்ப்பித்த அறிக்கை எதுவும் தங்களிடம் இல்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் ராமமோகன ராவின் இந்த ஒப்புதல் வெளியாகியுள்ளது. முக்கிய தகவல்கள் அடங்கிய அறிக்கை காணாமல் போனது குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.