தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தி முகமை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிறந்த இந்துத்துவா தலைவராக இருந்ததாகவும், அவரது இடத்தை தற்போது பாஜக நிரப்பி வருவதாகவும் கூறியிருக்கிறார். இது சர்சையை கிளப்பியுள்ள நிலையில், அண்ணாமலையில் கருத்தை கண்டித்து விகே.சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சாதி மத பேதம் கடந்து அனைவராலும் மதிக்கப்படக் கூடிய தலைவராக ஜெயலலிதா இருந்தார். ஜெயலலிதாவிற்கு தெய்வ நம்பிக்கை இருந்தது, ஆனால், மத நம்பிக்கை இருந்ததில்லை. ஒரு மக்கள் தலைவரை எந்த ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளும் சுருக்கி விட முடியாது என்று விகே. சுசிகலா தெரிவித்துள்ளார்.