பொன்முடி வழக்கு pt web
தமிழ்நாடு

பொன்முடி தொடர்பான வழக்கு - Confuse ஆன ஜெயக்குமார்... அனல்பறந்த விவாதம்!

“உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. திமுகவிற்கு இது ஜெயில் காலம் என்றே சொல்ல வேண்டும். 1 டூ 1 என கடைசியில் கோபாலபுரம் வரை வந்து நிற்கும்” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

PT WEB

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவர் குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், தண்டனை குறித்த விவரங்களை இன்று அறிவிக்கும் என தெரிவித்திருந்தது. அதன்படி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அபராதமாக தலா ரூ.50 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது.

Ponmudi | DMK

அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகளுக்காக ஒரு மாதத்திற்கு அவருக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொன்முடி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “வயதையும், மருத்துவக் காரணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார். என்றபோதிலும் கூட பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

பொன்முடி

இந்த விவகாரம் குறித்து புதிய தலைமுறையிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, “உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. திமுகவிற்கு இது ஜெயில் காலம் என்றே சொல்ல வேண்டும். 1 டூ 1 என கடைசியில் கோபாலபுரம் வரை வந்து நிற்கும்” என தெரிவித்தார்.

பின் பேசிய அவர், இந்த சொத்துக்குவிப்பு வழக்கையும் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுவிசாரணைக்கு எடுத்து தற்போதும் நிலுவையிலுள்ள மற்றொரு வழக்கையும் சற்று குழப்பிவிட்டார். எந்த வழக்கில் இந்த சிறைத்தண்டனை என்பது பற்றி அவர் குழம்பிவிட்ட நிலையில், இதுகுறித்து நெறியாளருக்கும் அவருக்கும் அனல் பறக்கும் விவாதம் நடந்தது. பின் அரசியல் விமர்சகர் கலை இந்த வழக்கு குறித்து ஜெயக்குமாருக்கு சுட்டிக்காட்டினர். அதைத்தொடர்ந்தும் ஜெயக்குமார் சில விமர்சனங்களை திமுக மீது வைத்தார். அந்த விவாதத்தை முழுமையாக கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்: