காவல்துறைக்கு ஆதரவாகவே வாக்கு மூலம் அதிகரித்து உள்ளதாக ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த விசாரணை நடத்தும் நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த விசாரணை நடத்தும் நீதிபதி ராஜேஸ்வரன், கோவையில் ஐந்தாவது முறையாக தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், வருகிற 27 ஆம் தேதி (வெள்ளி கிழமை)யுடன் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடந்து முடிய உள்ளதாகவும் கூறினார்.
தற்போது கோவை மாநகரகாவல் துணை ஆணையர் உட்பட 13 பேர் விசாரணைக்காக அழைத்து உள்ளதாகவும், கோவையில் விசாரணை முடிவடைந்த பிறகு அடுத்த கட்டமாக மதுரை மற்றும் சென்னையில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும், இன்னும் நூற்றுக் கணக்கான பேரை விசாரிக்க வேண்டி உள்ளதால், அனைத்து பகுதிகளிலும் விசாரணை நடத்தி முடிக்க இன்னும் ஒரு வருட காலமாகலாம் என தெரிவித்துள்ளார். மேலும் மதுரையில் பெரும்பாலும் காவல்துறைக்கு ஆதரவாகவே வாக்கு மூலம் அளித்து உள்ளதாக அவர் கூறினார்.