அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு புதிய தலைமுறை
தமிழ்நாடு

எட்டி பார்த்த முதல் காளை... ஆரம்பமே அதிருது!

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணி அளவில் துவங்கியது ஜல்லிக்கட்டு போட்டி.

ஜெனிட்டா ரோஸ்லின்

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் வருடம்தோறும் மஞ்சுவிரட்டு எனப்படும் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் . அந்தவகையில் இந்த வருடமும் முதல் நாளாக மதுரை அவனியாபுரத்தில் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண மதுரை மட்டும் அல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

கொடியசைத்து துவக்கம்: 

இன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர். ‘இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

இந்தவகையில் 1000 காளைகள் முதல் 600 மாடுபிடி வீரர்கள் வரை இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர். மேலும் போட்டியில் முதலிடம் பெறும் மாடுபிடி வீரர், காளையின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் வாடிவாசலில் இருந்து வெளியேறிய முதல் காளையே கட்டுக்கடங்காமல் களத்தைவிட்டு வெளியேறியது போட்டியின் விறுவிறுப்பை மேலும் அதிகரித்தது.

ஏற்பாடுகள்: 

  • ஒவ்வொரு சுற்றிலும் 75 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடு பிடி வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

  • மேலும் பாதுகாப்பு பணிக்காக 2000 காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இப்போட்டியில் அரசு தரப்பில் ஜல்லிக்கட்டு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • மேலும் அவசர கால மருத்துவ சேவை, கால்நடை மருத்துவ சேவை போன்றவை ஏற்பாடு செய்யப்படுகிறது.

  • மேலும் மது,ஊக்கமருந்து ஏதேனும் அருந்தி இருக்கிறார்களா? என்று பரிசோதனை செய்த பிறகே போட்டியாளர்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர் மற்றும் பங்கு பெறுவோர் விதிமுறைகளை பின்பற்றவும் அதனை மீறினால் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டநிலையில் அதனைத்தையும் சோதிதறிந்த பின்னரே களத்திலும் அனுமதிக்கப்படுகின்றனர்.பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.