மதுரையில் கொரோனா குறித்து கோடாங்கி அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூலித்தொழிலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள், தேவையில்லாமல் வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை கோரிப்பாளையம் சோதனை சாவடியில், சிவானந்தம் என்ற கூலித் தொழிலாளி சாலையில் சுற்றும் பொதுமக்களிடம் கொரோனா குறித்து கோடாங்கி அடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம், நோய் பாதிப்பை உணர்ந்து செயல்பட வேண்டும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தும் முருகானந்தம், இதனை நான் சொல்லவில்லை ஜக்கம்மா சொல்வதாக கூறி கோடங்கி அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கொரோனா தடுப்பு பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட கூலித் தொழிலாளியின் இந்த விழிப்புணர்வு முயற்சி பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.