Udhayanidhi pt desk
தமிழ்நாடு

"ஜெய் ஸ்ரீராம்" - "விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவதா?" – உதயநிதி கண்டனம்

அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரிஸ்வான் ஆட்டமிழந்த போது, ரசிகர்கள்சிலர் ஜெய் ஸ்ரீராம் எனமுழக்கமிட்டதற்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

webteam

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது. இந்தியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அப்போது, மைதானத்தில் இருந்த சில ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என தொடர்ந்து முழக்கமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

cricket fans

இது தொடர்பாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில், விரும்தோம்பலுக்கு புகழ்பெற்ற இந்தியாவில், பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், விளையாட்டு என்பது ஒருங்கிணைந்த சக்தியாகவும் உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள உதயநிதி, விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.