"புனிதமான கோயில்களை அரசு நிர்வகிக்கலாமா? தகுதி என்ன?" என்று ஜகி வாசுதேவ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
"சிதம்பரம் கோயில் பதஞ்சலி மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் பல கோயில்கள் அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் மரபுகள் சிதைந்து விட்டதா? மரபுகளை யாரும் அழிக்கமுடியாது. தற்போது பல கோயில்கள் சேதமடைந்துள்ளன. கோயில்களில் ஊழல்களும் நடப்பதாக மக்கள் கூறுகிறார்கள். பெரும்பான்மை மக்கள் இருக்கும்போது அவர்களால் கோயில்களை நிர்வகிக்க முடியம். விமான சேவை, விமான நிலையம், தொழிற்சாலை, வர்த்தகம் உள்ளிட்டவை அரசிடம் இருந்து தனியாருக்கு மாறுகின்றன. புனிதமான கோயில்களை மட்டும் அரசு நிர்வகிக்கலாமா? அவர்களுக்கான தகுதி என்ன?" என்று ஈஷா யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.