ஜாபர் சாதிக் pt web
தமிழ்நாடு

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனையுடன் பிணை

PT WEB

2ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக ஜாபர் சாதிக் உள்ளிட்டோரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாபர் சாதிக்

இது தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்து வரும் நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிணை கேட்டு, ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அதில் ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். பாஸ்போர்ட் ஏதேனும் இருந்தால் அதை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் அமலாக்கத்துறையால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர் சிறையில் இருந்து வெளி வரமுடியாத நிலையில் உள்ளார். இந்த கைதை எதிர்த்து ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.