தமிழ்நாடு

ஜாக்டோ ஜியோ போரட்டத்தால் வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்

ஜாக்டோ ஜியோ போரட்டத்தால் வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்

webteam

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் பல அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் தொடர வேண்டும், 7-வது ஊதிய குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பங்கேற்கவில்லை என்றாலும், சென்னை, கிருஷ்ணகிரி, கோவை அரியலூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருவாரூரில் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இதனால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் அந்த இடத்தில், பணிகள் முற்றிலும் முடங்கி அலுவலகமே வெறிசோடிக் காணப்படுகிறது. மேலும் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் தங்களுக்கு தேவையான சான்றிதழை பெற முடியாமல் ஏமாந்து திரும்பிச் செல்லும் நிலையும் உருவாகியுள்ளது.