புற்றுநோயை பலாப்பழம் சரி செய்துவிடும் எனக்கூறிய தங்கர்பச்சான், கரும்பு விவசாயி சின்னம் தனக்கும் வந்தது என்று கூறி பகீர் கிளப்பிய மன்சூர் அலிகான் என தேர்தல் பரப்புரையின்போது வேட்பாளர் பெருமக்கள் செய்த சம்பவங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டோட தலைநகரா திருச்சி இருந்துருக்கனும், இல்ல இல்ல... மதுரை, கோயமுத்தூராச்சும் இருந்துருக்கனும்- னு இங்க பலரும் சொல்லி சண்ட போட்டுட்டு அலைய... "ஏ... எல்லாரும் அங்க ஓரமா போயி வெளையாடுங்கய்யா.... கடலூருதான அதுக்கு செரியா இருந்திருக்க வேண்டிய ஊரு-னு" சொல்லி, ஆச்சரியப்பட வச்சிருக்காரு... அந்த தொகுதி பாமக வேட்பாளரு தங்கர்பச்சான்..
புற்றுநோய்க்கு உலகமே மருந்து கண்டுபிடிச்சிட்டு இருக்க, அந்த நோயை பலாப்பழம் சரி பண்ணிரும் சொல்லி ஒரு உருட்டு உருட்டுனாரு பாருங்க... மொத்த கடலூரும் ஆடிப்போச்சு...
இப்படி தங்கர்பச்சான் நம்ம தலையில இடிய எறக்க... அந்த கெறக்கத்துலயே நாகர்கோயில் பக்கம் நவுந்தோம்னா... அங்குட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரு சீமான்.. நெருப்புடா ரேஞ்ச்க்கு பிரச்சாரம் பண்ணிட்டு இருந்தாரு..
கெடச்ச மைக் சின்னத்த வச்சி சந்தோஷமா மக்கள் முன்னால மாஸ் காட்டிட்டு இருந்த சீமான்... "இங்க வாக்கு கேக்க போறவங்க எல்லாரும் மைக்க யூஸ் பண்ணிதான்டே ஆகனும்... எங்க மைக்கு இல்லாம யாரும் ஓட்டு கேக்க முடியாதுனு"... ஒவ்வொரு எடத்துலயும் சொல்லிட்டு இருந்தாரு...
ச்சே... மைக்கோட மகிமைய எவ்ளோ அழகா எடுத்து சொல்லுதாரு பாருய்யானு ஒவ்வொருத்தரும் பூரிச்சு போவ, சர்ச் ரோடு பக்கத்துல CAMPAIGN பண்றப்போ சீமானோட மைக்கு... திடீர்னு ஆஃப் ஆகிப்போச்சு....
டக்குனு... கீழே இருக்குற ஆளு... வேற மைக்க கொடுக்க... அதுவும் மக்கரு பண்ண... மனுஷன் கப்-சிப் ஆயிட்டாரு... எல்லாத்துக்கும் காரணம் அந்த ரத்தக்கொதிப்பு சம்பவமாத்தான் இருக்குமோ....
இப்போதான் கரும்பு விவசாயி சின்னத்தை கொஞ்ச கொஞ்சமா சீமான் மறந்துட்டு வர்றாரு... ஆனா... இந்த மன்சூர் அலிகான்.... சும்மா கெடக்காம.... "எனக்கும் அந்த சின்னம் வந்துச்சு.... ஆனா அத எடுக்க மனசு கேக்கல"-னு சொல்லி ரொம்பவே ஃபீல் பண்ணிருக்காரு....