தமிழ்நாடு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க புதிய கருவி: ஐடிஐ மாணவர் கண்டுபிடிப்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க புதிய கருவி: ஐடிஐ மாணவர் கண்டுபிடிப்பு

webteam

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க மேலூர் ஐ.டி.ஐ மாணவர் ஒருவர் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ரெங்கசாமிபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். ஐ.டி.ஐ மாணவரான இவர், சிறுவயது முதல் அறிவியல் மீதுள்ள ஆர்வத்தினால் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி, பல்வேறு பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில், பல்வேறு முயற்சிக்குப் பின் குழந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதுபோல் இனி எந்த ஒரு குழந்தையும் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழக்கக் கூடாது என்பதற்காக புதிய கருவியை கண்டுபிடிக்கும் முயற்சியை மேற்கொண்டார் முருகன்.

தற்போது ரூ.1000 செலவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க  புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள குழந்தையை எளிதாக மீட்டு விட முடியும் என தெரிவித்த அவர், இந்தக் கருவியை எளிதில் யாரும் பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.