கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்திற்கு ‘சுருளி’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள புதிய படம் ஒன்றில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்தது. அதில் இருந்து சமீபத்தில்தான் தனது அனைத்து வேலைகளையும் முடித்து கொடுத்துவிட்டு தனுஷ் வெளியேறினார். மேலும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து பணியாற்றியது குறித்தும் அவரது ட்விட்டர் பக்கத்தில் உயர்வாக கூறியிருந்தார். இந்தப் படம் குறித்த செய்திகள் ‘டி40’ என்றே வெளியாகி வந்தது.
இந்தப் படத்தினை முடித்த அடுத்த சில நாட்களில் திருநெல்வேலியில் தொடங்கிய மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொண்டார். அதற்கான புகைப்படங்கள் சமூக ஊடங்களில் வெளியாகி இருந்தன.
இந்நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியாகி உள்ளது. அதற்கு ‘சுருளி’ எனத் தலைப்பிடபட்டுள்ளது. இதில் தனுஷூக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். ஒய்நாட் ஸ்டியோவுடன் இணைந்து ரிலைன்ஸ் எண்டர்டெய்ன்மென் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.