தமிழ்நாடு

முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் விடியவிடிய சோதனை

முன்னாள் மத்திய அமைச்சர் வீட்டில் விடியவிடிய சோதனை

webteam

அரசு நிலத்தை தனியாருக்கு ஒதுக்கியதாக எழுந்த புகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் விடிய விடிய சோதனை நடைபெற்றது. 

2012ம் ஆண்டு சுற்றுச்சூழல்துறை இணையமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன், ஜார்க்கண்ட்டில் வனப்பகுதியை தனியாருக்கு ஒதுக்கியதில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ, கடந்த செப்டெம்பர் 9ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜெயந்தி நடராஜனின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது இரண்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் நில ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையின் உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சிலரிடம் விசாரணை நடத்தினர். அத்துடன் ஜெயந்தி நடராஜனிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற வருமான வரித்துறையினர் விடியவிடிய சோதனையில் ஈடுபட்டனர். நேற்று பிற்பகல் தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 3.30 மணி வரை நீடித்தது.