தமிழ்நாடு

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பு? - கே.சி வீரமணி மீது வழக்குப்பதிவு

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பு? - கே.சி வீரமணி மீது வழக்குப்பதிவு

Sinekadhara

வேலூர் மாவட்டத்திலுள்ள கே.சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 3 மணிநேரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

2016 முதல் 2021 வரை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி பதவியில் இருந்தகாலத்தில் வருமானத்துக்கும் அதிகமாகரூ.28.78 கோடிக்கு சொத்து குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் வந்தது. தற்போது இவருக்குச் சொந்தமான சென்னையில் 4 இடங்கள், வேலூர், திருவண்ணாமலை, ஏலகிரி, திருப்பத்தூர், ஓசூர் உள்ள சொகுசு விடுதி உள்பட 28 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

2016-21ல் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.28.78 கோடிக்கு சொத்துக்களை சேர்த்ததாக கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக 654% அளவுக்கு சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பது தெரியவந்துள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலைமுதலே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு கே.சி வீரமணிக்கு சொந்தமான கல்லூரியில் முதற்கட்டமாக வளாகங்களில் சோதனை நடைபெற்ற பிறகு தற்போது ஆய்வக அறையில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் கே. சி வீரமணிக்கு நெருக்கமானோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.