அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது 2016 முதல் 2021 வரை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. பதவியில் இருந்தகாலத்தில் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து குவித்திருப்பதாக இவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதுதொடர்பாக ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆவணங்களைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். தற்போது இவருக்குச் சொந்தமான சென்னையில் 4 இடங்கள், வேலூர், திருவண்ணாமலை உள்பட 28 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனையில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி வேலுமணியைத் தொடர்ந்து தற்போது கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.