தமிழ்நாடு

“ஷேர் ஆட்டோவில் 10 பேருக்கு மேல் பயணித்து விபத்து ஏற்பட்டால்..” - நீதிமன்றம் அதிரடி

“ஷேர் ஆட்டோவில் 10 பேருக்கு மேல் பயணித்து விபத்து ஏற்பட்டால்..” - நீதிமன்றம் அதிரடி

webteam

ஷேர் ஆட்டோவில் 10 பேருக்கு மேல் பயணித்து விபத்து ஏற்பட்டால் நிவாரணம் வழங்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மதுரையில் ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவதை தடுக்கக்கோரி உயர்நீதிமன்றக் கிளையில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் ஷேர் ஆட்டோவில் 10 பேருக்கு மேல் பயணித்து விபத்து ஏற்பட்டால் நிவாரணம் வழங்க இயலாது என உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தில் தற்போது எத்தனை ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. விதிகளை மீறி செயல்பட்ட ஷேர் ஆட்டோக்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, மதுரையில் 2016 முதல் 2019 வரை 1,065 ஷேர் ஆட்டோக்களுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தது. இதுகுறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.