தமிழ்நாடு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழப்பு?

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழப்பு?

JustinDurai

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சில நோயாளிகள் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா பரவல் அதிகரித்துவரும் மாவட்டம், சென்னை. நாளொன்றுக்கு சுமார் ஆயிரத்து 500 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். செங்கல்பட்டு மருத்துவமனையில் மட்டும் கொரோனா நோயாளிகள் சுமார் 500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு 10க்கும் மேற்பட்ட நோயாளிகள் திடீரென உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். உயிரிழந்தவர்களில் கொரோனா நோயாளிகள் யாரேனும் உள்ளார்களா என்பது பற்றிய தகவல் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.

தகவலறிந்து உடனடியாக மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தார். மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

முன்னதாக செங்கல்பட்டு மருத்துவனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் அதனாலேயே தனது தந்தை உயிரிழந்துவிட்டதாகவும் ஒருவர் கூறியுள்ளார்.