தமிழ்நாடு

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் குற்றமில்லை - அதிரடி விளக்கம்

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் குற்றமில்லை - அதிரடி விளக்கம்

webteam

செல்ஃபோன் பேசியபடியே வாகனம் ஓட்டினால் குற்றமில்லை எனத் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் ஸ்ரீ. வழக்கறிஞரான இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக பதில் வேண்டி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பத்திருந்தார். அந்தக் கேள்விகளுக்கு மதுரை போக்குவரத்து காவல்துறை சார்பில் பதி‌லளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில கேள்விகளையும், பதில்களையும் காணலாம்.

கேள்வி: வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ய போக்குவரத்து காவலரை தவிர யாருக்கு அதிகாரம் உள்ளது?

பதில்: பொதுப் பாதையில் வாகனம் ஓட்டும்போது சீருடையிலுள்ள காவலர்கள் ஆவணங்களை கோரும் போது கட்டாயம் காண்பிக்க வேண்டும்

கேள்வி: சாவியைப் பிடுங்கலாமா?

பதில்: சட்டத்தில் அப்படி எந்த வார்த்தையும் இல்லை

கேள்வி: செல்போன் பேசியபடி சென்றால் குற்றமா? எந்தப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்? என்ன தண்டனை?

பதில்: செல்போன் பேசியபடி சென்றால் குற்றம் என்று எந்தச் சட்டமும் சொல்லவில்லை.


இப்படி பல கேள்விகளுக்கு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை இவ்வாறான பதிலை தெரிவித்துள்ளது.