ஜிஎஸ்டி இணை இயக்குநர் பாலமுருகன்  pt desk
தமிழ்நாடு

மணிப்பூர் விவகாரம்: “இந்தியன் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது” - ஜிஎஸ்டி இணை இயக்குநர் பாலமுருகன்

மணிப்பூரில் நடைபெற்ற பழங்குடியினர் பெண்களின் நிலைமை பார்க்கும்பொழுது தான் இந்தியன் என சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது என ஜிஎஸ்டி இணை இயக்குநர் பாலமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

PT WEB

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் ஜி.எஸ்.டி இணை இயக்குநர் பாலமுருகன் மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,

“மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் எதையும் கண்டுக்கொள்ளாமல் அந்த மாநில முதலமைச்சர் பிரேன் சிங்கின் அமைதியாக இருக்கிறார். அவர் செய்வது கண்டிக்கத்தக்கது; மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தால் 60,000 மக்கள் வீடுகளை இழந்து தெருவில் நிற்கிறார்கள். இந்த மணிப்பூர் கலவரம் பற்றி பிரதமர் மோடி எதுவும் கூறாமல் மவுனம் காக்கிறார். பிரதமர் மோடி காக்கும் மவுனம் அங்கு உள்ள மக்களை மிருகம் ஆக்கியுள்ளது.

மணிப்பூரில் பழங்குடியினர் பெண்களை உடையின்றி நிர்வாணப்படுத்திய செய்தியை கண்டு நாம் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தோம். ஆனால் அந்த சம்பவம் நடந்தது மே 4 ஆம் தேதி அன்று நடந்தது. ஆனால் நமக்கு தெரியவந்தது இந்த மாதம் தான். பிரதமர் மோடி மவுனம் காத்து வந்ததால் ஒரு பெண் நடு ரோட்டில் ஆபாசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதை எல்லாம் பார்க்கும் பொழுது நான் இந்தியன் என சொல்ல வெட்கமாக இருக்கிறது. மணிப்பூர் மாநில முதலைச்சர் பிரேன் சிங் பதவியில் இருக்க தகுதியில்லை; அவர் பதவியிலிருந்து விலக வேண்டும். பிரதமர் மோடி மணிப்பூர் கலவரத்தை தடுத்து நிறுத்தி அந்த மாநில முதலமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

மணிப்பூரில் மே 4 ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்திற்கு மே 20 தேதி வழக்கு பதிவு செய்யப்படுகிறது. வெளி நாடுகளில் இருந்து விசமிகளை தூண்டி விட்டு பார்ப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.