மத்திய அரசின் ஒரே மொழி, ஒரே உணவு கொள்கை பயனளிக்காது என்று சமூகப் போராளி இரோம் ஷர்மிளா விமர்சித்துள்ளார்.
‘உயர்நீதிமன்றத்தில் தமிழை மொழியாக்குவோம்’ என்ற தலைப்பில் தமிழ் போராட்டக்குழு சார்பில் மதுரையில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய இரோம் ஷர்மிளா, நீதிமன்றத்தில் அவரவர் தாய்மொழி வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்படி இருந்தால்தான் வாதியாக இருப்பவர்களும் அவர்கள் நினைப்பதை தெரிவிக்க முடியும் என குறிப்பிட்டார். ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே உணவு என்ற கொள்கையில் மத்திய அரசு உள்ளது இது பயனளிக்காது. எல்லா மாநில அரசும் மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளது. இதனால் பாதிக்கப்படும் மக்களின் குரல் வெளியே தெரியவில்லை. மத்திய அரசின் நீட் தேர்வு என்ற கொள்கையால் தான் மாணவி அனிதா உயிரிழந்துள்ளதாக இரோம் ஷர்மிளா தெரிவித்தார்.