தமிழ்நாடு

அரியர் ஆல்பாஸ் நடவடிக்கைக்கு ஒப்புக்கொள்ளவில்லை; அதனால் என்மீது நடவடிக்கை! - சூரப்பா வாதம்

அரியர் ஆல்பாஸ் நடவடிக்கைக்கு ஒப்புக்கொள்ளவில்லை; அதனால் என்மீது நடவடிக்கை! - சூரப்பா வாதம்

jagadeesh

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியில் இருந்து ஓய்வுப்பெற்றுவிட்டதால் நீதியரசர் கலையரசன் ஆணையம் என்ன விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரப்பா வாதிட்டார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா கடந்த 2018-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தமிழக உயர்கல்வித்துறைக்கு புகார்கள் சென்றன.

இதில் துணைவேந்தருக்கும் தொடர்பிருப்பதாக சொல்லப்பட்டது. இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனிடையே துணைவேந்தர் பணியிலிருந்து சூரப்பா ஓய்வு பெற்றுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியில் இருந்து ஓய்வுப்பெற்றுவிட்டதால் நீதியரசர் கலையரசன் ஆணையம் என்ன விசாரிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரப்பா வாதிட்டார். அரியர் ஆல் பாஸ் நடவடிக்கைக்கு நான் ஒப்புக்கொள்ளாததால் என் மீது பதவி நீக்க விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது என்றும் குறிப்பிட்டார். நீதியரசர் கலையரசன் தலைமயிலான ஆணையம் செல்லத்தக்கதல்ல என்றும் சூரப்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.