தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சி தலையீடு: நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் கோரிக்கை

கொரோனா தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சி தலையீடு: நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் கோரிக்கை

jagadeesh

கொரோனா தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

18 வயது முதல் 44 வயதினருக்கான தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி இருப்பை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்புக்கு ஆளாகக்கூடிய தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளித்து கடந்த 22ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டதை தனது அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் கடந்த 27ஆம் தேதி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட லக்காபுரத்தில் நடைபெற்ற முகாமில் திமுக பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். முகாமுக்கு வெளியே காத்திருந்த முன்களப் பணியாளர்கள் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முதல்வரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு திமுகவினர் செயல் குந்தகம் விளைவிப்பது போல் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். தடுப்பூசி முகாம்களில் முன்னுரிமை பெற்றவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்