தமிழ்நாடு

முதன்முறையாக தமிழகத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா! எங்கு? எப்போது?

முதன்முறையாக தமிழகத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா! எங்கு? எப்போது?

webteam

தமிழ்நாட்டில் முதன்முதலாக சர்வதேச காத்தாடி திருவிழா நடைபெற உள்ளது. இந்தாண்டுக்கான சர்வதேச காத்தாடி திருவிழா சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட ஆயிரக்கணக்கான அழகான காத்தாடிகள் திறந்த வெளியில் பறக்க உள்ளன. ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15ம் தேதி வரை இவ்விழா நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வு 14 ஏக்கர் பரப்பளவில் மகாபலிபுரத்தில் உள்ள TTDC ஓஷன் வியூவில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு உணவுக் கடைகள், விளையாட்டுகள், குழந்தைகளுக்கான போட்டிகள் மற்றும் மாலையில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது..

இந்தியா, அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சார்ந்தவர்கள் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். இவ்விழாவில் பங்கேற்க குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.