தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணையில் அதிகாரிகள் ஆய்வு

webteam

முல்லைப்பெரியாறு அணையில், தமிழக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், அணையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைப் பொறியாளர் செல்வராஜ் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேக்கடியில் இருந்து படகு மூலம் முல்லைப்பெரியாறு அணைக்கு சென்ற குழுவினர், அங்கு பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, மதகுப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக, முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதியான தேக்கடி ஆனவச்சாலில், தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தின் வாகன நிறுத்துமிடத்தையும் ஆய்வு செய்தனர்.

தேக்கடி ஆனவச்சால் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், அரசு தரப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வாதிட உள்ள தமிழக அரசின் உதவி தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், வழக்கு தொடர்பாக முல்லைப்பெரியாறு அணைப் பகுதிகளை இக்குழுவினரோடு பார்வையிட்டது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.