தமிழ்நாடு

“அடப்பாவிங்களா இப்படி எல்லாமா கொள்ளை அடிப்பிங்க” சென்னையில் ஒரு நூதன கொள்ளை

“அடப்பாவிங்களா இப்படி எல்லாமா கொள்ளை அடிப்பிங்க” சென்னையில் ஒரு நூதன கொள்ளை

webteam

சென்னையில் வங்கிகளில் நூதன முறையில் காசோலை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காசோலை மோசடி மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்த சித்ரா என்பவர் சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்திய காவல்துறையினர், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பரை கைது செய்தனர். விசாரணையில் 15 வங்கிகளில் 20 பேரிடம் அவர் காசோலை மோசடி செய்ததிருப்பது தெரியவந்துள்ளது. காசோலையை வாடிக்கையாளர்கள் நிரப்பி அதன் பெட்டியில் போடும் போது அருகில் இருந்து நோட்டமிடும் சுரேஷ்குமார், அவர்கள் சென்ற பின்னர் தன்னுடைய காசோலையில் சிலவற்றை நிரப்பாமல் பெட்டியில் போட்டுவிட்டதாகவும் அதைத் தர வேண்டும் எனவும் வங்கி ஊழியர்களிடம் சாமர்த்தியமாக பேசி வாங்குவார். 

அதன் பின்னர் நூதன முறையில் காசோலையில், வாடிக்கையாளர்களின் தகவல்களை அழித்துவிட்டு தனது விவரங்களை நிரப்பி பணத்தை கொள்ளையடிப்பார். இப்படி 30 லட்சம் ரூபாய் வரை அவர் கொள்ளையடித்துள்ளார். சுரேஷ்குமாரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரிடம் இருந்து 85 ஆயிரத்து 500 ரூபாய், 4 ஏ.டி.எம் கார்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.