தமிழ்நாடு

பாரம்பரிய விதைத் திருவிழா..!

பாரம்பரிய விதைத் திருவிழா..!

webteam

இயற்கை விவசாயத்தையும், பாரம்பரிய விதைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், இந்தியாவில் உள்ள அனைத்து பாரம்பரிய விதைகளும் ஒரே இடத்தில் சங்கமித்த, பாரம்பரிய விதை திருவிழா கோவையில் நடைபெற்றது. 

கோவையை அடுத்த சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இந்த பாரம்பரிய விதை திருவிழா நடைபெற்றது. இயற்கை மருத்துவத்தில் பயன்படும் மூலிகை செடி விதைகள், நாட்டு காய்கறி விதைகள், பல்வேறு பகுதிகளின் நெல் விதைகள், சிறு தானியங்கள், காய்கறி விதைகள், மரபு விதைகள் உள்ளிட்டவைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. 

தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பீகார், ஒரிசா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த விதைத் திருவிழாவில் பலர் கலந்து கொண்டு, அந்தந்த மாநிலங்களில் உள்ள பாரம்பரிய விதைகளை காட்சிப்படுத்தி இருந்தனர். குறிப்பாக மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம், இயற்கை விளைபொருட்களை சந்தைப்படுத்தல் மாறும் இயற்கை விதைகளை கண்டறியும் முறை குறித்து நிபுணர்கள் இதில் விளக்கினர்.

பாரம்பரிய மரங்கள் தற்போது அழிந்து வருவதால் பறவைகளும் அழிந்து வருவதாகவவும், இதனால் குறைந்த அளவிலான நிலத்தில் அடர்த்தி நிறைந்த பல்வேறு பாரம்பரிய மரங்களை நடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விதைகள் மட்டுமல்லாது, பாரம்பரிய உணவுகள், அடுப்பில்லா சமையல், இயற்கை உணவகங்கள், குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டு பொருட்கள் அங்காடி உள்ளிட்டவை பொதுமக்களை மிகவும் கவர்ந்தது.