இந்திய நாட்டின் விமானப்படை தொடங்கி 72 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 8-ஆம் தேதி விமானப்படை தினம் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு விமானப்படை தின விழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை விமானப்படை வெகுவாக மேற்கொண்டுள்ளது.
இந்த ஆண்டு விமானப்படை கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்ட விமானப்படை சாகச நிகழ்ச்சி அரங்கேற இருக்கிறது.
மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்களான ரபேல், தேஜாஸ் உள்ளிட்ட போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. இது மட்டும் அல்லாமல் 70-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலமாக பொதுமக்கள் முன்னிலையில் விமானப்படையின் திறனை வெளிக்காட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
விமான சாகச நிகழ்ச்சி நடைபெறும் மெரினா கடற்கரை பகுதி மட்டுமல்லாமல் சென்னையே விழா கோலம் பூண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்... கடந்த ஒரு வாரமாக இதற்கான ஒத்திகைகள் நடைபெற்ற வருகின்றன... நாளை காலை மக்கள் கண் முன்னே விமானப்படையின் சாகசம் அரங்கேறுகிறது..
20 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இப்படி ஒரு சாகசத்தை காண மக்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச ஒத்திகைக்கே மக்கள் திரண்டு வந்து கண்டுகளித்தனர். சாகசத்தை பார்த்த பிறகு மக்கள் தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொண்டனர். விவரம் வீடியோவில்...